Shopping Cart
Toll-Free No. : 1800-425-1757 (24 மணிநேர சேவை)
A- A A+

திருக்கோயில் திங்களிதழ்:

தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை (TNHRCE) 1958-ஆம் ஆண்டு முதல் 'திருக்கோயில்' என்ற பெயரில் ஒவ்வொரு திங்கள்தோறும் புகழ்பெற்ற பல்வேறு திருத்தலங்களின் வரலாறு, நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாறு, சமய இலக்கியம், கோயில்களின் உள்கட்டமைப்பு, சமயம் பற்றிய வினா விடை, பூசை முறைகள், திருவிழாக்கள், சமயச் செய்திகள், கோயில் கலைகள், சிலைகள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஆன்மிக மரபுகள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு சமய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.


திருக்கோயில் இதழுக்கான சந்தா மற்றும் நடப்பு மாத இதழ்
Product content here

Read Thirukkoil magazines()


Product content here

திங்களிதழ் சந்தா:

ஆன்மிக அன்பர்களிடையே சமய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, திருமுறை (தேவாரம் மற்றும் திருவாசகம்) மற்றும் நாலாயிர திவ்யபிரபந்தம் (ஆழ்வார்கள் பாடிய பாடல்கள்) தொடர்பான கட்டுரைகளைப் பரப்புவதில் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும், வள்ளலார், பாம்பன் சுவாமிகள், இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற அருளாளர்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளியிடப்படுகின்றன. திருக்கோயில்களின் நன்னீராட்டுப் பெருவிழா, மக்களிடையே சமய சிந்தனைகளை வெளிப்படுத்தும் அறிஞர்களின் உரைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளைக் கட்டுரைகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. இப்பணிகளால் கடந்த ஐந்து தலைமுறைகளாகத் திருக்கோயில் திங்களிதழ் மூலம் இந்து சமய அறநிலையத்துறை ஆன்மிகத் திருப்பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றது.

திங்களிதழ் சந்தா விவரம்:

  • தனி இதழின் விலை - ₹35
  • ஓராண்டு சந்தா - ₹420
  • ஐந்து ஆண்டுகள் சந்தா - ₹2100
  • பத்து ஆண்டுகள் சந்தா - ₹4200
  • பதினைந்து ஆண்டுகள் சந்தா - ₹6300

முகவரி:

முதன்மை பதிப்பாசிரியர்,
பதிப்பகப்பிரிவு, இந்து சமய அறநிலையத்துறை,
எண். 119, உத்தமர் காந்தி சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, தமிழ்நாடு, இந்தியா
மின் அஞ்சல்:publication[dot]hrce[at]tn[dot]gov[dot]in,
தொலைப்பேசி: 044-28339999 / 1800-425-1757 / 9498665116
ஆசிரியர்,
திருக்கோயில் திங்களிதழ்,
இந்து சமய அறநிலையத்துறை,
எண். 119, உத்தமர் காந்தி சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, தமிழ்நாடு, இந்தியா
மின் அஞ்சல்:publication[dot]hrce[at]tn[dot]gov[dot]in,
தொலைப்பேசி: 044-28339999 / 1800-425-1757 / 9498665116

கிடைக்குமிடம்:

திருக்கோயில் திங்களிதழ் இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து முக்கியத் திருக்கோயில்களிலும், மற்றும் திருக்கோயில் ஆன்மிகப் புத்தக விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். திருக்கோயில் இதழின் சந்தாவை "THE COMMISSIONER, HR & CE DEPARTMENT, CHENNAI-600034" என்ற முகவரிக்குக் கேட்பு வரைவோலை / பணவிடை மூலம் செலுத்தலாம். மேலும், இணைய வழி சந்தா செலுத்த https://publication.hrce.tn.gov.in.