Shopping Cart
Toll-Free No. : 1800-425-1757 (24 மணிநேர சேவை)
A- A A+

இந்து சமய அறநிலையத்துறை - பதிப்பகம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பாகப் பதிப்பகப்பிரிவு தொடங்கப்பட்டு திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணங்கள், திருக்கோயில் தொடர்பான ஆகமங்களை ஆவணப்படுத்துதல். நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், தொன்மையான அரிய சமய நூல்களை மறுபதிப்பு செய்து நூலாக்கம் செய்தல், கிராமப்புறக் கோயில்களின் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகளை ஆவணப்படுத்துதல். திருக்கோயில்களில் கண்டறியப்படும் தொன்மையான ஓலைச்சுவடிகள் மற்றும் செப்பேடுகளைத் திரட்டிப் பாதுகாத்தல் மற்றும் மின்நூல் வடிவில் மாற்றம் செய்தல். திருக்கோயில் கட்டடக்கலை, செந்தமிழ் இலக்கியங்களை நூலாக்கம் செய்யும் சீரிய நோக்குடன் தமிழ்மொழி வல்லுநர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 108 அரிய நூல்கள் முதற்கட்டமாகப் பதிப்பிக்கப்பட்டு 19.01.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 108 அரிய ஆன்மிக நூல்கள் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டமாக 300 அரிய ஆன்மிக நூல்கள் பதிப்பிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுபோல பதிப்பகம் மூலம் ஆண்டுதோறும் அரிய ஆன்மிக நூல்கள் வெளியிடும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட நூல்கள் பக்தர்களுக்கு எளிதில் கிடைக்கும் வண்ணம் முக்கியத் திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள ஆன்மிகப் புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

முதன்மைப் பதிப்பாசிரியர் :திரு. பி.என். ஸ்ரீதர் இ.ஆ.ப., ஆணையர்
ஒருங்கிணைப்பாளர்             : திருமதி சி. ஹரிப்ரியா, கூடுதல் ஆணையர் (கல்வி (ம) தொண்டு நிறுவனங்கள்)
ஆசிரியர்                                   : முனைவர் ஜெ. சசிக்குமார்

Top Image
Second Image
Third Image
பதிப்பகப் பிரிவின் நோக்கங்கள்
  • திருக்கோயில்களின் தலவரலாறுகள் மற்றும் தலபுராணங்களை ஆவணப்படுத்துதல்.
  • நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள் மற்றும் அரிய ஆன்மிக நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிடுதல்.
  • திருக்கோயில்களில் கண்டறியப்படும் தொன்மையான ஓலைச்சுவடிகள் மற்றும் செப்பேடுகளைத் திரட்டி, பராமரித்து, பாதுகாத்து, மின்னாக்கம் செய்து நூல்களாகப் பதிப்பித்தல்.
  • கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை சார்ந்த நூல்களை நூலாக்கம் செய்து, திருக்கோயில் விற்பனை நிலையங்கள் மற்றும் இணையவழி மூலம் ஆன்மிக அன்பர்களுக்கு எளிதில் கிடைக்கச்செய்தல்.
ஓலைச்சுவடிகள் - செப்பேடுகள்
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் திருக்கோயில்களில் களஆய்வு செய்து கிடைக்கப் பெற்ற ஓலைச்சுவடிகள் மற்றும் செப்பேடுகளைச் சேகரித்து பராமரித்து, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
  • ஓலைச்சுவடிகள் மற்றும் செப்புப் பட்டயங்களைப் பராமரித்துப் பாதுகாப்பதுடன், மின்படியாக்கம் செய்து ஆய்வு மையத்தில் காட்சிப்படுத்தவும், நூலாக்கம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.